புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2015

அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்: தமிழிசை தடாலடி!

பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என்று தமிழக பாஜக
தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சேர்ந்து முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வோம் என்றார். 

 2016-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

தமிழகத்தில் மாற்றம் ஏற்பட விரும்புவோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரலாம் என்று அழைப்பு விடுத்த தமிழிசை, எளிய மக்கள் அணுக முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தமிழிசை இப்படி தெரிவித்திருப்பது பாமகவுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பா.ஜனதா கூட்டணியில் பாமக இடம்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தேர்தல் நெருக்கத்தில் ராமதாஸ் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கக்கூடும். கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரும், தனித்து போட்டி என்றே கூறிவிட்டு, கடைசி நேரத்தில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்ற உதாரணம் உள்ளது என்பதால், இப்போதைக்கு எதையும் உறுதியாக சொல்ல முடியாது

ad

ad