புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2015

சென்.மேரிஸ் அணி கிண்ணம் வென்றது

k
யாழ். மாவட்ட அணிகளுக்கு இடையே தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் நடத்தப்பட்ட மைலோ கிண்ண உதைபந்தாட்டத் தொடரில்
மூன்றாவது தடவையாகவும் கிண்ணம் வென்று ஹற்றிக் சாதனை படைத்துள்ளது நாவாந்துறை சென். மேரிஸ் அணி.
சமீபகாலமாக நடத்தப்பட்டு வந்த மைலோ தொடரின் இறுதியாட்டத்தில் பா­ஸையூர் சென்.அன்ரனிஸ் அணியும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணியும் நேற்று சனிக்கிழமை அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
ஆரம்பம் முதலே அன்ரனிஸ் அணிக்கான வாய்ப்புக்கள் அமையத் தான் செய்தது. ஆனால் கோல் கணக்கை ஆரம்பிக்கத் தவறியது அந்த அணி. 15ஆவது நிமிடத்தில் கோல் கணக்கை ஆரம்பித்து வைத்தார் மேரிஸின் யூட். மேலதிக கோல்கள் பதியப்படாத நிலையில் 1:0 என்ற மேரிஸின் ஆதிக்கத்துடன் முடிவடைந்தது முதல் பாதி.
எதிர்பார்ப்புக்கள் இரட்டிப்பாகியிருக்க ஆரம்பமானது ஆட்டத்தின் இரண் டாம் பாதி. விட்டுக்கொடாத வலுவான போராட்டம் அரங்கேறியது. கோல் கணக்கில் மாற்றமில்லாமல் சென்று கொண்டிருந்த ஆட்டத்தில் இரண்டாவது கோலை விளாசினார் மேரிஸின் சாள்ஸ். கிட்டத்தட்ட உறுதியாகியிருந்த மேரிஸின் வெற்றியை மேலும் வலுப் படுத்தும் விதமாக யூட் 55 ஆவது, 60ஆவது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை விளாச முடிவில் 4:0 என்ற கோல் கணக்கில் கிண்ணத்தைக் கைப்பற்றியது சென்.மேரிஸ்.
தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் நடத்தப்பட்ட மைலோ கிண்ணத் தொடரில் மூன்று தடவைகளும் சென்.மேரிஸ் அணியே கிண்ணம் வென்றமை குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகனாக சென்.மேரிஸ் அணியின் யூட் தெரிவான அதேநேரம் தொட ராட்ட நாயகனாக சென்.அன்ரனிஸ் அணியின் கலிஸ்ரஸும் சிறந்த கோல்காப்பாளராகக் சென்.மேரிஸ் அணியின் சுதர்சனும் தெரிவானார்கள்

ad

ad