புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2015

வீட்டுத் திட்டத்தில் பாலியல் லஞ்சம்: இந்தியத் தூதுவரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டச் செயற்பாட்டில் பயனாளியிடம் இலங்கை செஞ்சிலுவைச்சங்க அதிகாரியொருவர்
பாலியல் லஞ்சம் கோரிய விவகாரம் குறித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் விரிவாகக் கலந்துரையாடவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகத் தொடர்பு அதிகாரி மகீஸ் ஜொனி தெரிவித்தார்.

பாலியல் லஞ்சம் கோரப்பட்டதாக எழுத்து மூலம் தங்களுக்குச் செய்யப்பட்ட ஒரு முறைப்பாட்டையடுத்து குழுவொன்றின் ஊடாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை குறித்து இன்று தாங்கள் கூடி ஆராய்ந்தபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 
நேற்று நடைபெற்ற இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பான விசாரணை அறிக்கை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அது தொடர்பாக இந்திய வீட்டுத்திட்டத்திற்கான கொடையாளியாகிய இந்திய அரசாங்கத்திற்கு முதலில் தெரிவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளை கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது தமது விசாரணை தொடர்பான அறிக்கை இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்படும் என தெரிவித்த மகீஸ் ஜொனி, அதன் பின்பே அற்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் பற்றியும், அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பிலும் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்க முடியும் என தெரிவித்தார்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தைப் பொறுத்தளவில், எழுத்து மூலமாக முறைப்பாடு கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு, அந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அடுத்த கட்ட நடவடிக்கை இந்தயத் தூதுவருடனான சந்திப்பின் பின்னரே எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்ததையடுத்து, அந்த வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன. இந்த வகையில் 17 ஆயிரத்து 500 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டிருக்கின்றது. 
பயனாளிகளுக்கு இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதிக்கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் பயனாளி ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரியதாக முறைப்பாடு 

ad

ad