புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2015

போர்க்குற்றங்கள் இராணுவச் சிப்பாய் ஒப்புதல் வாக்குமூலம்

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற, இதுவரை வெளிவராத போர்க்குற்றங்கள் குறித்து
இராணுவச் சிப்பாய் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவச் சிப்பாய் ஒருவரே குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இறுதிக் கட்டப் போரின்போது மின்னேரிய இராணுவ முகாமின் புலனாய்வாளர்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட, இதுவரை வெளிவராத பாரியளவான போர்க்குற்றங்கள் குறித்த தகவல்கள் இவரது வாக்குமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ராணுவச்சிப்பாயின் வாக்குமூலத்தைக் கொண்டு தற்போதைக்கு இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மிகவும் இரகசியமான முறையில் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள தகவல்களின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பிரகீத் எக்னெலிகொட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வாளர்களை விடுவித்துக் கொள்ள இராணுவ உயரதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காத நிலையில், கைது செய்யப்பட்டிருப்பவர்கள் தாங்களாக முன்வந்து தமது உயரதிகாரிகளைக் காட்டிக்கொடுக்க முற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

ad

ad