புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2015

புளியங்குளம் வடக்கில் இந்திய வீட்டுத்திட்ட வீடுகள் விற்பனை: பாதிக்கப்பட்ட பல மக்கள் வீடு கோரி கண்ணீர்

மன்னார் மறை மாவட்டத்திலுள்ள பறப்பாங்கண்டல் திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் வைக்கப்பட்டிருந்த திவ்விய நற்கருணை இரத்தமும் சதையுமாக
மாறிய அதிசயத்தையடுத்து அது கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து இதன் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக உரோமாபுரிக்கு எடுத்துச் செல்லப்படலாம் எனவும் நம்பப்படுகிறது.
மன்னார் மறை மாவட்டத்திலுள்ள பறப்பாங்கண்டல் பங்கில் அமைந்துள்ள திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் வைக்கப்பட்டிருந்த திவ்விய நற்கருணை பாத்திரத்துக்குள் இரத்தமும் சதையும் இருப்பதை அந்த மடத்தின் அருட்சகோதரியினால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த புதன் கிழமை காணப்பட்ட இந்த அதிசய நிகழ்வு வியாழக்கிழமையே பொதுமக்கள் மத்தியில் பரவத்தொடங்கியது. இதனால் மன்னாரின் நாலா பக்கங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் இந்த அதிசயத்தை பார்ப்பதற்கும் வழிபடுவதற்கும் என படையெடுத்தனர்.
இந்த அதிசய திவ்விய நற்கருணை கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருதினங்களும் அந்த பங்கு தந்தையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் ஆயர் இல்லத்திலிருந்து வந்த குழு ஒன்று குறித்த அதிசய திவ்விய நற்கருணையை எடுத்துச் சென்றுள்ளதாக மன்னார் ஆயர் இல்லம் தெரிவிக்கின்றது.
இந்த நற்கருணை கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டது பலருக்கு தெரியாத காரணத்தால் இன்னும் பலர் இதை பார்வையிடும் நோக்குடன் மன்னார் ஆயர் இல்லத்துக்கு வந்தவண்ணம் இருப்பதையும் காணக்கூடியதாக இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ad

ad