புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2015

விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழினி காலமானார்


தமிழீழ விடுதலை புலிகள் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவியாக செயற்பட்ட சுப்ரமணியம் சிவகாமி எனப்படும் தமிழினி இன்று காலை காலமாகியுள்ளார்.
இறந்த போது அவருக்கு வயது 43 ஆகும். புற்றுநோய் காரணமாகவே அவர் இறந்துள்ளார்.
தமிழினி கிளிநொச்சி உதயநகர் தங்கபுரத்தில் வைத்து 2009ம் ஆண்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் 2013ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
வவுனியாக, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் அவருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறை முன்னாள் பொறுப்பாளர்  தமிழினி என்று அழைக்கப்படும் சிவகாமி சிவசுப்பிரமணியம்  இன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு 43வயதாகும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த வாரம் கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று அவர் மரணமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போரின் பின்னர் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட தமிழினி பின்னர் குடும்பத்துடன் இணைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விடயம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நோயின் கடும் தாக்கம் காரணமாக அண்மையில் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவரிடம் அடையாள அட்டை எதுவும் இல்லாத காரணத்தினால், அவரின் கணவரான ஜெயக்குமாரின் கடவுச்சீட்டைக் கொண்டே அனுமதி பெறப்பட்டது.
இதன் அடிப்படையில் வைத்தியசாலை பதிவில் சிவகாமி ஜெயக்குமார் என்று பதியப்பட்டுள்ளது.
தமிழினி 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.

ad

ad