புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2015

சிம்பு உங்களை ஒருமையில் பேசியுள்ளாரே? விஷால் பதில்




தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கு ஆதரவு அளிக்கக் கோரி நாடக நடிகர்களை சந்திக்க நடிகர் விஷால் அணியினர் சேலம் சென்றனர். வியாழக்கிழமை காலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது விஷால் கூறியதாவது, எந்த சமரசமும் செய்ய தயாராக இல்லை. தேர்தலை சந்திக்க இருக்கிறோம். நீதிமன்றத்திற்கு சென்று அக்டோபர் 15ஆம் தேதி நடக்க வேண்டிய தேர்தல் 18ஆம் தேதிக்கு நடக்க இருக்கிறது. 
தயாரிப்பாளர் சங்கத்தினர், இயக்குநர்கள் சங்கத்தினர் சமரசம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதனை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.

கேள்வி: பாண்டவர் அணிதான் நடிகர் சங்கத்தில் பிளவை ஏற்படுத்துகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

விஷால்: தயாரிப்பாளர் சங்கம் உள்பட அனைத்து சங்கத்திலும் தேர்தல் நடக்கிறது. நடிகர் சங்கத்தில் மட்டும் ஏன் இந்த கேள்வி வருகிறது. தேர்தலில் நிற்பது திரையுலக நலனுக்காக மட்டுமே. மேலும் சங்கத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சி. நடிகர் சங்க நிலத்தில் கட்டிடம் வேண்டும். நான் கேட்கவில்லை. அந்த இடத்தில் கட்டிடம் வரவேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள்.

கேள்வி: 11ஆம் தேதிக்கு மேல் அனைவரும் ஓரணியில் இருப்பார்கள் என்று சரத்குமார் அணியினர் சொல்லியிருக்கிறார்கள். இது சாத்தியமா? 

விஷால்: இல்லை.

ரோகினி: அவர்கள் வந்து சேர்ந்துகொண்டால் ஓரணிதான். 

கேள்வி: விஷால் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறோம் என்று கூறுகிறார்களே.

ரோகினி: ஜனநாயக முறைப்படி தேர்தல் என்று வந்தவிட்டது. எனவே தேர்தல் நடக்கப் போகிறது. விஷால் அணி வெற்றி பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடம் வந்துள்ளது. 

கேள்வி: விஷாலின் தனிப்பட்ட பிரச்சனையால்தான் நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டுகிறார்களே.

விஷால்: நான் ஏன் சரத்குமார் - ராதிகா குடும்பத்தை பிரிக்க வேண்டும்.

கேள்வி: சிம்பு உங்களை ஒருமையில் பேசியுள்ளார். சங்கத்தைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?

விஷால்: நான் நடிகன். உறுப்பினர் கார்டு இருக்கு. அதனால் முறையாக நான் தேர்தலில் நிற்கிறேன் என்றார்.

ad

ad