புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2015

அதிரவைத்த போட்டோ - தாய்மைக்கு பெருமை சேர்த்த நடிகை கஸ்தூரி




பிரபல புகைப்படக்காரர் ஜெடி பெல் என்பவர் ‘தாய்மையின் தேகங்கள்’ என்ற தலைப்பில் பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார். இதற்கு உலகெங்கும் உள்ள 80 தாய்மார்கள் நிர்வாணமாக காட்சியளிக்க முன்வந்துள்ளனர். பிரசவகால பெண்களுக்கும், குழந்தைப் பெற்ற பெண்களுக்கும் இந்த புகைப்படங்கள் அர்பணிக்கப் படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில், பிரபல நடிகை கஸ்தூரியும் ஒருவராக இருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் கஸ்தூரி. பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ‘இந்தியன்’ படத்தில் கமலுக்கு தங்கையாக நடித்து தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தார். இவர் ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் திரைப்படங்களில் நடித்து வந்தார் கஸ்தூரி. சமீபத்தில் வெளியான ‘வடகறி’ படத்தில் ஜெய்க்கு அண்ணியாக நடித்தார். 

ad

ad