புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2015

சற்று முன் மொகாலி டெஸ்ட்: 108 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா


இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட தொடரில், முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி தென்ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 201 ரன்களில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி தொடக்க நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. 

டீன் எல்கர் 13 ரன்னுடனும், கேப்டன் ஹஷிம் அம்லா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இந்த நிலையில் 2–வது நாளான நேற்றும் சுழலின் தாக்கம் தலைதூக்கியது. முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 68 ஓவர்களில் 184 ரன்களுக்கு சுருண்டது. 

17 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் மறுபடியும் டக்–அவுட் ஆனார். 2–வது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 2–வது இன்னிங்சில் 40 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்து மொத்தமாக 142 ரன்கள் முன்னிலை பெற்று ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. இதையடுத்து தனது 3 நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி மேற்கொண்டு வெறும் 75 ரன்களை மட்டுமே சேர்த்து 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த்தது. 

தென் ஆப்பிரிக்காவின் சுழலில் இந்திய வீரர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக நடையை கட்டினர். 75.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 200 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 77 ரன்களும் முரளி விஜய் 47 ரன்களும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணியில் இமரான் தாஹீர் 4 விக்கெட்டுகளையும் ஹர்மர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்சில் பெற்ற 17 ரன்கள் முன்னிலையையும் சேர்த்து இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு 218 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது.

218 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தனது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பமே ஆட்டம் கண்டுள்ளது. 10 ரன்களை சேர்ப்பதற்குள் அந்த அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ad

ad