புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2015

தமிழகத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 112ஆக உயர்வு



தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் இடிமின்னல் தாக்குவது, மரம் முறிந்து விழுவது போன்ற அசம்பாவிதங்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இது போன்ற அசம்பாவிதங்களில் நேற்று மட்டும் 9 பேர் பலியானார்கள்.

இதையடுத்து தமிழகத்தில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 112ஆக உயர்ந்துள்ளது.  மழை பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பிற மாவட்டங்களைவிட கடலூரில் அதிகமாக உள்ளது.  

இந்நிலையில் நேற்று கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்தார்.bஇதையடுத்து கடலூர் மாவட்டத்தில் மழையினால் உயிரிழ்ந்தோரின் எண்ணிக்கை  மேலும் அதிகரித்துள்ளது. 

ad

ad