புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2015

பாரீஸில் பயங்கவாதிகள் தாக்குதலில்150-க்கு அதிகமானோர் பலி, மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் - ஒபாமா, மோடி கடும் கண்டனம்


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கவாதிகள் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நாட்டு மக்களுக்காக அந்நாட்டு அதிபர் ஹாலந்தே தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
பிரான்ஸ் மக்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்
அவரது முழு உரை:
என் சக குடிமக்களே, நான் இப்போது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் நாம் சற்றும் எதிர்பாராத வேளையில் பாரீஸில் பல இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பலர் பலியாகினர். மிக அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது மிகவும் கொடூரமானது.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். மேலும், நகரின் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக எந்த ஒரு தாக்குதலும் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க அமைச்சரவை கூட்டத்தை கூட்டியிருக்கிறேன்.
அதில் இரண்டு முக்கிய முடிவுகள் எட்டப்பட்டும். ஒன்று நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என்பது. இதனால், சில பொது இடங்கள் மூடப்படலாம், போக்குவரத்து மாற்றம் செய்யப்படலாம். தேவைப்பாட்டல் போலீஸ் சோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.
மற்றொன்று பிரான்ஸ் நாட்டுடனான அண்டை நாடுகளுக்குச் செல்லும் எல்லைப் பகுதிகள் பாதுகாப்பு கருதி மூடப்படும். இதன் மூலம், பிரான்ஸில் தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் யாரும் உள்ளே நுழைய முடியாது அதேபோல் இங்கு தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளும் வெளியே தப்பிச் செல்ல முடியாது.
பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில் நாம் அனைவரும் அமைதியுடன் இருப்பது மிகவும் அவசியம். அதேபோல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
பயங்கரவாதம் நம்மை அச்சுறுத்தியுள்ள நிலையில் நாம் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும். மன உறுதியுடன் இருப்போம் என நான் நம்புகிறேன். நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
நம்மை அச்சுறுத்த வேண்டும் என்பதே பயங்கரவாதிகளின் நோக்கம். இந்த வேளையில் அச்சப்படாமலும் இருக்க முடியாது. ஆனால், இத்தகைய அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வல்லமை கொண்ட தேசம் ஒன்று இருக்கிறது என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இதன் மூலம் நாம் தீவிரவாதிகளை முறியடிக்க முடியும்.
குடிமக்களே, தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் இன்னமும் முடியவில்லை. சிக்கலான தருணங்கள் நீடிக்கின்றன. நமது பாதுகாப்புப் படையினர் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
பயங்கரவாதிகளிடம் இருந்து நம் தேசத்தை பாதுகாப்புப் படையினர் திறம்பட பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள்.
குடியாட்சி வாழ்க! பிரான்ஸ் வாழ்க.
இவ்வாறு ஹாலந்தே பேசினார்.

ad

ad