புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2015

ரஷ்யாவுடன் மோதுமா அமெரிக்கா? எப்-15சி போர் விமானங்களை பெருமளவில் துருக்கியில் குவித்து வரும் அமெரிக்கா


jet
சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கெதிரான கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு நிகராக, ஏவுகணைகள்
தாங்கிய போர் விமானங்களை துருக்கியில் அமெரிக்கா குவித்து வருகிறது.பஷார் அல் ஆசாத்துக்கு ஆதராவாக களமிறங்கியிருக்கும் ரஷ்யா, அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றது.இதனால் பல முறை அமெரிக்கா கண்டனம் வெளியீட்ட போதும் பொருட்படுத்தாமல் ரஷ்யா சரமாரி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந் நிலையில், ரஷ்யாவுடனான போருக்கு தயாராகும் வகையில் ஏவுகணைகள் தாங்கிய எப்-15சி போர் விமானங்களை பெருமளவில் துருக்கியில் அமெரிக்கா குவித்து வருகிறது.அதுவும்எல்லையையொட்டிய துருக்கி விமானப் படை தளத்தில் இவை நிறுத்தப்பட்டுள்ளன.இந்த போர் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள ஏவுகணைகள் எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்டது.தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு இத்தகைய அதிநவீன போர் விமானங்களை கொண்டுவந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இது ரஷ்யாவுடனான மோதலுக்கான முன் தயாரிப்புகளாக இருக்கலாம் என்கின்றனர் ராணுவ வல்லுநர்கள்.

ad

ad