வியாழன், நவம்பர் 05, 2015

முன்னாள் புலிகள் 20 பேருக்கு புனர்வாழ்வு : நீதிமன்றம் உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 20 பேருக்கு புனர்வாழ்வளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட புலிச்சந்தேகநபர்கள் 20 பேரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு பிரதான நீதவான் உத்தவிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றையதினம் ஆஜர்படுத்தப்பட்ட ஏனைய 18 பேர் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்