புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2015

கேரள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற‘ ட்வென்டி20‘!

கேரள உள்ளாட்சி தேர்தலில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 'ட்வென்டி 20 'என்ற அமைப்பு சார்பில் பேட்டியில்ட்ட வேட்பாளர்கள்
அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கேரளாவில் இயங்கி வரும் அன்னா கிட்டெக்ஸ் டெக்ஸ்டைல்ஸ் குழுமத்தின் சார்பில் ட்வென்டி 20 என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு  பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கீழக்கம்பலம் கிராமத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அண்மையில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கீழக்கம்பலம் கிராம பஞ்சாயத்தின் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர். 

ஆனால் கீழக்கம்பலம் பஞ்சாயத்தில்,  ட்வெண்டி 20 அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளனர். அதாவது இங்குள்ள 19 வார்டுகளில் 17 வார்டுகளை ட்வென்டி 20 அமைப்பின் நிர்வாகிகள் கைப்பற்றியுள்ளனர்.  

இது மட்டுமல்ல கேரளத்தின் பல்வேறு இடங்களிலும் அரசியல் கட்சி வேட்பாளர்களை பல்வேறு பொது நல அமைப்பை சேர்ந்த வேட்பாளர்கள் வீழ்த்தியுள்ளனர்.

ad

ad