புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2015

பாரிஸில் துப்பாக்கிச் சண்டை - பெண் பயங்கரவாதி உள்பட 3 பேர் சுட்டுக்கொலை - 2 பேர் கைது



கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  பயங்கரவாதிகள் 6 இடங்களில் நடத்திய தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை தீவிரவாதிகள் 8 பேரும் கொல்லப்பட்டனர். 

பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழிக்க சபதம் ஏற்றுள்ள பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, பயங்கரவாதிகளை அடியோடு நசுக்க உலகநாடுகள் ஒருங்கிணையவேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும், வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிய பிரான்ஸ் காவல்துறைக்கு ஹாலண்டே உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று பாரிஸில் வடக்கு மண்டலத்தில் காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டபோது, பயங்கரவாதிகளுங்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அந்த நகரில் பதட்டம் நிலவுகிறது.

இந்த சண்டையில் பெண் பயங்கரவாதி உள்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 

ad

ad