புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2015

தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் திங்களன்று விடுதலை (சம்பந்தன் தெரிவிப்பு)

தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் எதிர்வரும் 9ம் திகதி விடுதலை செய்யப்பட உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் 30 பேர் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னதாக விடுதலை செய்யப்படவுள்ளனர்.

48 பேரை பொது மன்னிப்பில் விடுதலை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் 32 பேர் விடு தலை செய்யப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளும ன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் சிலர் மற்றும்  சட்டமா அதிபர் அலுவலகத்தைச் சேர் ந்த உயரதிகாரிகளையும் சந்திந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது கைதிகளின் விடு தலை தொடர்பில் முக்கிய பல விடயங்கள் உரையாடப்பட்டது. இதன் போது எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் 32 கைதிகளை விடுதலை செய்வதாக கூறியுள்ளனர்.
ஏனையவர்களில் சிலரை எதிர்வரும் 20-ம் திகதிக்கு முன்னதாக விடுவிப்பதாகவும் குற் றவாளியாக இணங்காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட 48 பேருக்கு ஜனாதிபதி மூல மாக பொது மன்னிப்பு வழங்கப்பட்டால் தான் அவர்களை விடுவிக்க முடியும்.
ஏனைய கைதிகளை ஆராய்வதற்கு ஒரு அமைச்சர்குழு நியமிக்கப்பட்டடு அந்தக்குழு சட்டரீதியான முறையை மட்டும் பின்பற்றா மல் அரசியல் ரீதியாகவும் பரீட்சித்து அக்குழு முடிவினை எடுக்க வேண்டும் அந்தக்குழு விரைவில் இயங்கும் என எதிர்பார்க்கிறேன்.
இந்த கூட்டத்தின் பின்னர் நாம் ஜாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்து ரையாடினோம். குற்றவாளியாக இனங்கான ப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் அவர்களுக்கான பொது மன்னி ப்பை வழங்க வேண்டும் எனஜனாதிபதியிடம் கேட்டோம்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சில நாட்கள் தான் நாட்டில் இருக்க மாட்டேன் ஆக¼வு நான் எனது பய ணத்தினை முடித்துக்கொண்டு நாடு திரும்பி யதும் இவ்விடயம் தொடர்பில் நன்கு ஆராய் ந்து முடிவெடுப்பதாக எம்மிடம் உறுதியளித்து ள்ளார்.                                    

ad

ad