புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் 760 ஜேர்மனியர்கள் இணைந்துள்ளனர்: உள்துறை அமைச்சர் பகீர் தகவல்


சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கத்தில் ஜேர்மனி நாட்டை சேர்ந்த 760 பேர் இணைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜேர்மனி உள்துறை அமைச்சரான Thomas de Maiziere என்பவர் நேற்று அந்நாட்டில் வெளியாகும் பில்ட் என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ஐ.எஸ் தீவிரவாதிகளின் வீடாக ஜேர்மனி நாடு மாறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கும் செய்தியாகும்.
தற்போது ஜேர்மனியில் வசித்து வரும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை முன்பு இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
இது மட்டுமில்லாமல், ஜேர்மனி நாட்டை விட்டு வெளியேறி சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்படும் ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கத்தில் இதுவரை 760 பேர் இணைந்துள்ளனர்.
இவர்களில் 5 பேரில் ஒருவர் பெண் தீவிரவாதி ஆவார். பெரும்பாலானவர்கள் 20 வயதுடையவர்களாகவே உள்ளனர்.
எனினும், கடந்த சில மாதங்களாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வலுப்பெற்று வரும் தாக்குதலில் இதுவரை 120 ஜேர்மன் நாட்டு தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.
தாக்குதலுக்கு அச்சப்பட்டு சுமார் 200 பேர் நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் 70 பேர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில் சில சிக்கல்கள் இருப்பதால் எஞ்சிய நபர்கள் தற்போது சிறையில் தண்டனை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர்.
மேலும், இதுவரை கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் ஜேர்மனி நாட்டிற்குள் அகதிகளாக வரும் வெளிநாட்டினர்களுக்கும் தீவிரவாதிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தெரியவந்திருக்கிறது என உள்துறை அமைச்சர் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 25,000 பேர் தாக்குதலில் ஈடுப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad