புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

நாக்பூர் டெஸ்டில் அஷ்வின், ஜடேஜா மாயாஜாலம்: 79 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா அணி

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி 79 ரன்களில் சுருண்டது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று தொடங்கியது.இதில்,
டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இந்திய அணி இந்திய அணி முதல் இன்னிங்சில் 78.2 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்காவும், சுழற்பந்து வீச்சில் தடுமாறியது. நேற்றைய முடிவில் 9 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்து இருந்தது.

2 வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் நேற்றைய நிலையே காணப்பட்டது. இந்திய அணியின் சுழலை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் விழி பிதுங்கி நின்றனர். இன்று ஒரு ரன்னை மட்டுமே சேர்த்த தென் ஆப்பிரிக்க்க அணி மேற்கொண்டு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எல்கர் 7 ரன்னிலும், அம்லா 1 ரன்னிலும், டி வில்லியர்ஸ் ரன் எதுவும்  இன்றியும் வந்த வேகத்தில் திரும்பினர்.  இதன் பின்னர் வந்த டு பிளஸிஸ்(10 ரன்கள்) நிலைக்கவில்லை.  இதனால், தென் ஆப்பிரிக்க அணி 35 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

டுமினி மட்டும் ஓரளவு நிலைத்து நிற்க மறுமுனையில் உள்ள வீரர்களை வெளியேற்றும் பணியை இந்திய  சுழற்பந்து வீச்சாளர்கள் செவ்வனே செய்தனர். இதனால், அந்த அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தது. வெறும் 33.1 ஓவர்கள் மட்டுமே விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 79 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இன்று  68 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்டுகளை தாரைவார்த்துள்ளது. இந்திய அணியைவிட தென் ஆப்பிரிக்க அணி, 136 ரன்கள் பின் தங்கியுள்ளது. அதிகபட்சமாக டுமினி 35 ரன்கள் சேர்த்தார். 

இந்திய அணி தரப்பில், அஷ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா, 4 விக்கெட்டுகளையும் அள்ளினர். 

ad

ad