புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2015

பாரிசில் தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்


பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இரு கலை அரங்கங்கள் மற்றும் கால்பந்து மைதானத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 150-க்கு
அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட 8 பேர் கொல்லப்பட்டதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
பட்டக்லான் இசை அரங்கத்தில் மனித வெடிகுண்டுகளாக தாக்குதல் நடத்தவந்த மூன்று தீவிரவாதிகள் உடல் சிதறி பலியானதாகவும், மேலும் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், கால்பந்து மைதானத்தில் தாக்குதல் நடத்தவந்த மூன்று தீவிரவாதிகளும், கிழக்கு பாரிஸ் நகரில் உள்ள ஒரு தெரு வழியாக தப்பியோட முயன்ற ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒபாமா, மோடி கடும் கண்டனம்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒபாமா, அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்துவது மூர்கத்தமான செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடியும் தாக்குதலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
பாரீஸில் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி மிகுந்த வேதனையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .பலியானவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மோசமான தருணத்தில் இந்தியா பிரான்ஸுக்கு துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

ad

ad