புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

உலகை உலுக்கிய ஹிட்லர் 95 வயது வரை உயிரோடு வாழ்ந்தாரா? அதிர வைக்கும் புதிய தகவல்கள்

ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் 95 வயது வரை பூரண நலத்துடன் தனது காதலியுடன் வசித்து வந்ததாக
பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
1945ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் போரின் முடிவில், ஏப்ரல் 30ம் திகதி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரை விட்டதாக கூறப்பட்டது.
சிலர், ஹிட்லர் அங்கிருந்து தப்பி வேறொரு நாட்டில் வசித்து வருவதாக கூறி வருகின்றனர்.
இதே வரிசையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.
Simoni Renee Guerreiro Dias என்ற பெண் எழுத்தாளர், ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது கடைசி நிமிடங்களை விளக்கும் விதத்தில் Hitler in Brazil- His Life and His Death(ஹிட்லர் பிரேசில் நாட்டில் வசித்தார். அவரது வாழ்க்கையும் மரணமும்) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தில் ஜேர்மனியை விட்டு தப்பிய ஹிட்லர் முதலில் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினா நாட்டிற்கு சென்றதாகவும், அங்கிருந்து பிறகு பிரேசில் நாட்டிற்கு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், தன்னுடைய உண்மையான பெயரை Adolf Leipzig என மாற்றிக்கொண்டு பிரேசில் நாட்டில் தங்கியிருந்தபோது Cutinga என்ற பெயருடைய பிரேசில் நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து பூரண் நலத்துடன் 95 வயது வரை வாழ்ந்ததாக அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஹிட்லர் தனது காதலியுடன் வயதான தோற்றத்துடன் புகைப்படம் ஒன்றையும் ஆதரமாக அந்த புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை மேலும் உறுதிப்படுத்த Adolf Leipzig-ன் சடலத்தை வெளியே எடுத்து டி.என்.ஏ பரிசோதனை செய்ய பிரேசில் அரசாங்கத்திடம் அவர் அனுமதி கோரியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய தகவல்கள் இணையதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad