புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2015

முலாயம்சிங் யாதவின் பிறந்த நாள்: A.R.ரகுமானின் இசை நிகழ்ச்சி: ஆடம்பர கொண்டாட்டம் தேவையா என சர்ச்சை



உத்திரப்பிரதேச மாநில முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் தந்தையும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவின் 76வது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) அம்மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளையொட்டி முலாயம் சிங் யாதவின் சொந்த ஊரான சைவாய் கிராமத்தில் வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி மாலையில் நடைபெறுகிறது. 

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும்போது, முதலமைச்சரின் குடும்பத்தினருககு ஆடம்பரமான இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தேவைதான என்று சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று இந்த பிறந்த நாள் விழாக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்

ad

ad