புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2015

ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

227439.1-720x480
பாகிஸ்தான் அணியுடனான தீர்மானம் மிக்க நான்காவது ஒருநாள் போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து நான்கு
போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரை 3 க்கு 1 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை டுபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 355 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணியின் சார்பில் பட்லர் 116 ஓட்டங்களையும் ரோய் 102 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் மொஹமட் இர்பான் மற்றும் அசார் அலி தலா 2 விக்கெட்டையும் யாசிர் ஷா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து 356 என்ற ஓட்ட இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 40.4 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள 84 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றியை தனதாக்கியது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணியின் சார்பில், சோஹைப் மாலிக் 52, பாபார் ஆஸம் 51, அசார் அலி 44, மற்றும் மொஹமட் ஹபீஸ் 37 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் மொயின் அலி மற்றும் ரஷீத் ஆகியோர் தலா 3 விக்கெட்டையும் வில்லே 2 மற்றும் ரொப்லே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடரின் ஆட்டநாயகன் விருதினை இங்கிலாந்து வீரர் பட்லர் பெற்றுக் கொண்டார்.

ad

ad