புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2015

வட மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்த உறவுகளே பெரும்பாலான உதவிகளை கிழக்கு மண்ணுக்கு வழங்கி வைகிறார்கள்..யோகேஸ்வரன் எம் பி







கிழக்கு மாகாண மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் வட மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்த உறவுகளே பெரும்பாலான உதவிகளை கிழக்கு மண்ணுக்கு வழங்கி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் கராத்தே கல்லூரியில் கல்வி பயிலும் கறுப்பு பட்டி மாணவர்களின் நிதி உதவியில், திருகோணமலை ஈச்சிலம்பற்று கல்விக் கோட்டத்தில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
திருகோணமலை மாவடிச்சேனை அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அதிபர் இரா.சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் செ.லோகராஜா, சங்காரவேல் பவுண்டேசன் இணைப்பாளர் எஸ்.பிறேமானந், கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் நா.சந்திரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவடிச்சேனை அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய 16, மாணவர்களுக்கும், கல்லடி மாலநீலியம்மன் வித்தியாலய 12, மாணவர்களுக்கும், பூநகர் திருவள்ளுவர் வித்தியாலய 02, மாணவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இங்கு பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற எமது உறவுகள் ஈழமண்ணிலே பல உதவிகளை செய்து வருவதை நான் அறிவேன். கிழக்கு மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் ஒரு சில அன்பர்களே உதவி உதவி செய்கிறார்கள்.
கிழக்கு மண்ணுக்கு பெரும்பாலான உதவிகளை இதுவரை வழங்கி வருவது வட மாகாணத்தை சேர்ந்த புலம்பெயர் உறவுகள் என்பதை நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். கிழக்கு மண்ணைச் சேர்ந்தவன் என்ற வகையில் அவர்களை பாராட்டுவதில் பெருமை கொள்கிறேன். அவர்களது சேவையால் பல வித உதவிகள் எமது கிழக்கு மண்ணுக்கு வந்து சேர்கிறது.
இவர்கள் செய்யும் உதவிகளுக்கு பிரதியுபகாரமாக எமது மாணவச் செல்வங்கள் கல்வியில் உயர் நிலையடைந்து உயர் கல்விமான்களாக வரவேண்டும். வறுமை இருக்கலாம் வேறு காரணங்கள் இருக்கலாம் ஆனால் கல்விக்கு அவையெல்லாம் தடைகளாகக் கூடாது” என்றார்.

ad

ad