புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2015

ஜனநாயக களத்தில் போராடுவதற்கு வயது தடையல்ல என்பதை உணர்த்தியவர் மாரியம்மாள்! நா.க.தமிழீழ அரசு


ஜனநாயக ரீதியாக களத்தில் போராடுவதற்கு வயது தடையல்ல என்பதை மறைந்த அன்னை மாரியம்மாளின் வாழ்க்கை எமக்கு உணர்த்தியிருப்பதாக
 அவரின் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதிமுகா பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயற்கை எய்தியிருந்தார். இந்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில்,
ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக அர்பணிப்புடன் குரல்கொடுத்துவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி அவர்களின் தாயார் மாரியம்மாள் மறைந்த செய்தி கேட்டு நாங்கள் ஆழ்ந்த கவலை அடைகின்றோம்.
தனது வாழ் நாள் முழுவதும் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் குறித்து பல்வேறு காலகட்டங்களிலும் அர்பணிப்புடன் பணியாற்றியவர் மறைந்த மாரியம்மாள்.
தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்களைப் பார்த்து கண்கலங்கிய அன்னை மாரியம்மாள் சிறிலங்கா அரசாங்கத்தின்
தமிழினப் படுகொலைக்கு எதிராக உலகின் முன் நீதி வேண்டி தள்ளாடும் வயதிலும் வீதியில் இறங்கி போராடியதன் மூலம்,
தமிழகத்திலே ஈழத்தமிழர்களிற்கு ஆதரவான ஐனநாயக ரீதியான போராட்டக்களத்தை வலுப்படுத்த முன்மாதிரியாக திகழ்ந்தவர் அன்னை மாரியம்மாள் என்பதை நாம் இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.
இலக்கு நோக்கிய பயணத்திலே வாழ்க்கையின் இறுதிவரை ஐனநாயக களத்திலே போராடியவர் அன்னை மாரியம்மாள். ஐனநாயக ரீதியான களத்திலே போராடுவதற்கு வயது ஒரு தடையில்லை மனவலிமை மட்டுமே அனைத்திற்கும் அடிப்படையானது என்ற வரலாற்றுப் பாடத்தை எமக்கு உணர்த்திச் சென்றார்.
அன்னை மாரியம்மாளின் வாழ்க்கையை முன்னுதாரணமாக கொண்டு ஈழ விடுதலையை விரைவாக வென்றெடுப்பதே ஈழ விடுதலைக்காக ஏங்கியிருந்த அன்னை
மாரியம்மாளிற்கும் ஈழவிடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த அனைவருக்கும் செய்யும் காணிக்கையாக அமையும் என்று நாடு கடந்த தமிழீழ
அரசாங்கம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad