புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2015

தற்போதுவரை விண்பொருள் விழவில்லை: காத்திருக்கும் விஞ்ஞானிகள்

-
WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள சுமார் 7 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று, இன்று காலை இலங்கை நேரப்படி 11.50 மணியளவில் இலங்கைக்குத் தெற்கே 65 கி.மீ தொலைவில் கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் விழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மர்மப் பொருள், 1969ஆம் ஆண்டு அமெரிக்கா செலுத்திய அப்பலோ 10 விண்கலத்தின் பூஸ்டரான, ஸ்நூப்பி என அழைக்கப்படும், பாகமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இது, செக்கனுக்கு 11 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. வடமேற்கில் இருந்து தென்கிழக்கு நோக்கியதாக விழும் இந்த மர்மப் பொருள், பூமியின் கடல் மட்டத்துக்கு மேல் 80 கி.மீ தொலைவில் வெடித்துச் சிதறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது நிலத்தை வந்தடையும் வாய்ப்புகள் குறைவு என்ற போதிலும், நிலமட்டத்துக்கு நெருக்கமாக நெருப்புக்கோளம் தென்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த மர்மப் பொருள் விழுவதை அவதானிக்க, ஐரோப்பிய விண்வெளி முகவர் அமைப்பின் விஞ்ஞானிகள் குழுவொன்று மாத்தறை பகுதியில் முகாமிட்டுள்ளது.
ருகுணு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழுவொன்றும் இந்தக் குழுவினருடன் இணைந்துள்ளது.
இருப்பினும் விஞ்ஞானிகள் ஏற்கனவே எதிர்வு கூறிய நேரத்திற்கு விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விண்பொருள் வரும் வழியிலேயே எரிந்திருக்கலாம்! விஞ்ஞானிகள் நம்பிக்கை
´WT1190F´ என்ற மர்மப்பொருள், பூமியை வந்தடைய முன்னர் வளிமண்டலத்திலேயே, எரிந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இன்று குறித்த மர்மப் பொருள் விண்ணில் இருந்து விழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டதோடு, மீனவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும்,  தற்போது வரையில், விண்பொருள் பூமியினை வந்தடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad