புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2015

சுவிஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல்? வாட்ஸ்அப்-ல் உலவும் அதிர்ச்சி தகவல்


சுவிஸ் நாட்டை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என வாட்ஸ் அப்-ல் உலவும் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டின் Zurich பகுதியை குறிவைத்து வரும் டிசம்பர் 12ஆம் திகதி அங்குள்ள முக்கிய ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என பரவி வரும் வாட்ஸ் அப் செய்தியால் பொலிசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
திங்கள்கிழமை முதன்முறையாக இந்த தகவல் பரவியதும் அது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நபர், ஏன் தாக்குதல் நடத்தப்படுகிறது என்ற காரணத்தை அந்த செய்தியில் எங்கும் குறிப்பிடவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து விளக்கமளித்த Zurich நகர பொலிசார், இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், கூடுதல் தகவல்களை திரட்டி வருவதால், அதன் பின்னரே உரிய நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
மேலும், உளவு அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக குறிப்பிட்ட அதிகாரிகள், இதுபோன்ற செய்திகள் பரவுகிறதா என்பதை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாரீஸ் தாக்குதலை அடுத்து ஒட்டுமொத்த நாடுகளும் பாதுகாப்பை பலப்படுத்தி வரும் இந்த தருணத்தில், தீவிரவாத தாக்குதல் குறித்து வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ad

ad