புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2015

கிளிநொச்சியில் கம்பிகளுடன் நுழைந்த கொள்ளை கும்பல்! மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்



கிளிநொச்சி- கோரக்கன்கட்டு வை.எம்.சீ.ஏ குடியிருப்பு பகுதிக்குள் இன்றைய தினம் அதிகாலை 1.30 மணியளவில் வாள்கள், கம்பிகளுடன் நுழைந்த கொள்ளை கும்பல் ஒன்றை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்த பின்னர் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோரக்கன்கட்டு வை.எம்.சீ.ஏ குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவு வேளைகயில் இனந்தெரியாத நபர் ஒருவரின் நடமாட்டம் சில தினங்களாக இருந்த நிலையில் குடியிருப்பு மக்கள் குறித்த நபரை வழிமறித்து விசாரிக்க முற்பட்ட போது அவர், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றார்.
குறித்த நபர் தப்பிச் சென்றதன் பின்னர் இன்றைய தினம் அதிகாலை 1.30 மணியளவில் மேற்படி குடியிருப்பு பகுதிக்குள் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வாள்கள், கம்பிகளுடன் நுழைந்திருக்கின்றனர்.
நுழைந்தவர்கள் மக்களின் வீடுகளுக்குள்ளும் நுழைய முற்பட்ட நிலையில் சுதாகரித்துக் கொண்ட பொதுமக்கள் குறித்த கொள்ளை கும்பலை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றுள்ளனர்.
இதன்போது 2 பேர் தப்பிச் சென்ற நிலையில் 4 பேர் மக்களிடம் மாட்டிக் கொண்டனர்.
இந்நிலையில் பிடிக்கப்பட்டவர்களிடமிருந்து வாள்கள், கம்பிகளை, பிடுங்கிக் கொண்ட மக்கள் அவர்களை கட்டிவைத்து நையப்புடைத்ததன் பின்னர் இன்று காலை கிளிநொச்சி பொலிஸில் ஒப்படைத்திருக்கின்றனர்.
பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad