புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2015

இலங்கைக்கு அருகே தாழமுக்கம்; சூறாவளி எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
இலங்கைக்கு தென் கிழக்கே காற்றமுக்க நில ஏற்பட்டுள்ளதால் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு கூடிய மழை வீழ்ச்சி ஏற்படுவதுடன் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் 100 மி.மீ. அளவு மழை பெய்யக் கூடும்.
இதன்போது கிழக்கு கரையோர பகுதியில் பலமான காற்று வீசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையின் கிழக்கு கடலிலிருந்து (திருகோணமலையிலிருந்து) 500 கிலோமீற்றர் தொலைவில் தாழமுக்கம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காற்ற முக்க நிலை வலுவடையும் நிலை ஏற் பட்டால் கிழக்கு கடலில் சூறாளி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ad

ad