புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2015

கிரிமினல் வழக்கொன்றின் கோப்புகள் நீதியமைச்சில் மாயம்! மஹிந்த ஆட்சியின் மற்றுமொரு சாதனை


குற்றவியல் வழக்கொன்று தொடர்பான கோப்புகள் நீதியமைச்சில் வைத்து மாயமான சம்பவமொன்று மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது நடைபெற்றுள்ளது.
ரத்னபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல கடந்த 1997ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் பலாபத்தல பிரதேசத்தில் வீடொன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 13 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு பாரிய அபராதத் தொகையும், சிறைத்தண்டனையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்தது. எனினும் குற்றவாளிகள் மேன்முறையீடு செய்திருந்த காரணத்தினால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த மஹிந்த ஆட்சியின் போது 2008ம் ஆண்டு அன்றைய நீதியமைச்சர் அமரசிறி தொடங்கொட குறித்த வழக்கு தொடர்பான கோப்புகளை தனது அமைச்சின் செயலாளர் ஊடாக நீதிமன்றத்திலிருந்து தருவித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அதன் பின்னர் உரிய தினத்தில் கோப்புகள் திருப்பிக் கையளிக்கப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான வழக்கு பல தவணைகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் ரத்னபுரி நீதிமன்றத்தில் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கு தொடர்பான கோப்புகள் நீதியமைச்சில் வைத்து காணாமல் போயுள்ளமை தொடர்பாக நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குற்றவாளிகளை தப்புவிக்க கடந்த அரசின் முக்கியஸ்தர்கள் திட்டமிட்டு மேற்கொண்ட சதி இது என பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ad

ad