புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2015

மில்லியன் கணக்கில் கோடீஸ்வரர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு

இந்த வரவு செலவுத் திட்டம் ஒருசில கோடீஸ்வரர்களுக்கு மாத்திரம் தளத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதனை நோக்கமாகக்கொள்ளவில்லை. மாறாக, மில்லியன் கோடீஸ்வரர்களை உருவாக்குவதற்கான வழியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

வரவு - செலவுத் திட்டத்தை நேற்று சமர்ப்பித்து உரையாற்றிய அவர் மேலும் கூறிய தாவது, வானவில் போன்று பிரகாசிக்கக் கூடிய பொருளாதாரச் சேமிப்புள்ள அபிவிருத்தியடைந்த ஒரு நாடாக எமது நாட்டை மாற்றியமைப்பதே எமது கனவாகும்.

எமது தேசம் நற்குணத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் செழிப்பான ஒரு நாடாக மிளர வேண்டும். எமது எதிர்காலச் சந்ததியினர் அர்ப்பணிப்புக்களின் விளைவுகளை அனுபவிக்கக் கூடிய வகையில் நாம் பொருளாதாரச் சுதந்திரமொன்றினை ஏற்படுத்திக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.

மேலும் நடுத்தர வருமானப் பொருளா தாரமொன்றினை நோக்கி மாற்றமடைவதற்கான குறிக்கோள்களுடன் குறுகிய, நடுத்தர, மற்றும் நீண்ட கால உபாயங்களை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அபிவிருத்திச் சவால்களை கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்ட இலக்குகளையும்.

குறிக்கோள்களையும் அடைவதே எமது எதிர்பார்ப்பாகும். நாம் ஒரு சில கோடீஸ்வரர்களுக்கு மாத்திரம் தளத்தினை ஏற்படுத்திக்கொடுப்பதனை நோக்கமாகக் கொள்ளவில்லை. மில்லியன் கோடீஸ்வரர் களை உருவாக்குவதற்கான வழியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.

பொருளாதார முகாமைத்துவத்தில் எதிர்வு கூற முடியாத ஒழுங்கற்ற பொருளாதாரக் கொள்கைகளும், ஒழுங்கற்ற நடைமுறைகளும் முன்னைய ராஜபக்ஷ ஆட்சிக் காலப் பகுதியில் காணக்கூடியதாக இருந்ததோடு முன்மொழியப்பட்டுள்ள சீர்த்திருத்தங்களும், ஒழுங்கான பொருளாதாரக் கொள்கைகளும் எமது அரசாங்கத்தினை அவ்வாறான எதிர்மறையான செயல்முறைகளிலிருந்து நகர்வதற்கு உதவின.

தற்போது பதவியிலுள்ள பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமைத்துவத்தின் கீழான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கக் காலப் பகுதியில் இவ்வெதிர்மறையான போக்கினை மாற்றியமைத்து மீண்டும் ஒரு முறை சாதகமான வளர்ச்சியொன்றிற்கு வித்திட்டது.

இவ்வரசாங்கத்தின் தொலைநோக்கு பல்வேறு தொழில்முயற்சி யாளர்களுக்கு விசேட வாய்ப்புக்களை வழங்கியதோடு புதிய முதலீடுகள் பலவற்றை பொருளாதாரத்திற்கு நல்லாட்சியுடனும்.

வெளிப்படைத் தன்மையுடன் ஏற்படுத்திக் கொடுத்தது. ஏற்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் பல்வேறு உயர் நன்மைகளை மக்களுக்கு வழங்கியதோடு மீண்டும் ஒரு முறை இலங்கையின் பொருளாதாரத்தை சாதகமான வளர்ச்சிப் போக்கிற்கு எடுத்துச் சென்றது.

இவ்வாறான தைரியமான அணுகுமுறைக ளின் ஊடாக பின்தங்கிய பொருளாதா ரத்திற்கு புதிய உத்வேகமென்றினை வழங்கியதோடு கடந்த ஆட்சிக் காலத்தின் போதான மந்தப் போக்குடைய பொருளாதார நடவடிக்கைகளை சிறந்த நிலைமைக்கு துரிதமாக மாற்றுவதற்கு ஒரு புதிய அணுகுமுறை ஈடுபடுத்தப்பட்டது.

2005 இலிருந்து 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியானது வரலாற்றில் மக்களின் எதிர்பார்ப்புக்கள் மிகவும் உச்ச நிலையில் காணப்பட்டாலும் அவைகளின் அடைதலானது சாதாரண மட்டத்தையும் அடையவில்லை.

2009 ஆம் ஆண்டு யுத்த முடிவுடன் மூன்று தசாப்தங்களாக நாட்டில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையுடன் கூடிய அனைத்துத் தரப்பினராலும் கண்டிக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக் கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இலங்கை மக்கள் அனைவரும் செழிப்பான மற்றும் சந்தோஷமானதொரு எதிர்காலத்தை எதிர்பார்த்தனர்.

யுத்தத்தின் உச்ச கட்டத்தில் நாட்டு மக்களுக்கு தமது வயிற்றைக் கட்டிக்கொள்ளும்படி வேண்டிக் கொண்ட ஆட்சியாளர்கள் கட்டை அவிழ்ப்பதற்கு எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை யென்பது தெளிவு. அதிகரித்து வந்த கடன் சுமையின் காரணமாக நாட்டின் பொருளாதாரமானது நாளுக்கு நாள் மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது.

ஆட்சியாளர்களின் கையாட்களினால் விளம்பரப்படுத்தப்பட்ட கோயபல்ஸ் நியாயத்தினூடாக பொருளாதாரச் சொல்லாட்சிகள் முன்னிலைப்படுத்தப்பட்டதுமல்லாமல், ஆட்சியாளர்களின் புகழ்பாடுபவர்களின் மூலம் இலங்கை எனும் நாடு முன்நோக்கிச் செல்ல முடியாது படு பாதாளத்துக்கே சென்றது. எவ்வாறாயினும். ஜனவரி 8 ஆம் திகதி இக்குமிழி வெடித்து மாற்றத்தை ஏற்படுத்தியது.

2009 ஆம் ஆண்டிற்குப் பிந்திய காலப் பகுதியானது நாட்டில் அனைத்து மக்களிடத்திலும் இன, மத, மற்றும் சாதி வேறுபாடுகள் அகன்று மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அந்நியோன்ய நம்பிக்கை மற்றும் நட்புடன் கூடிய ஒரு காலப் பகுதியாக எழுச்சி பெறும் என எதிர்பார்க் கப்பட்டது. அத்துடன் பொருளாதார மீட்சியும் எதிர்வு கூறப்பட்டது.

இந்த இடத்தில் நாட்டை மிகவும் மோசமான பயங்கரவாதிகளிருந்து மீட்டெடுத்த முப்படையினருக்கும் மரியாதை செலுத்துவது எனது முதற்கண் கடமை எனக் கருதுகிறேன். முப்படையினர் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களினால் மேற்கொள்ளப்பட்ட தியாகங்கள் என்று நாம் மறவோம்.

அவர்களால் மேற்கொள்ளப்பட்ட தியாகங்களை அவர்களுக்காக இத்தனை நினைவுத் தூபிகள் அல்லது ஞாபகார்த்த நினைவுகளை மேற்கொண்டாலும் அதனை ஈடுசெய்ய முடியாது. அவர்களினால் பெற்றுத்தரப்பட்ட சமாதானம் எனும் பரிசை பாதுகாப்பது எமது கடமையாகும்.

நாம் வென்றெடுத்த சுதந்திரமானது நிலை நிறுத்தப்பட்டு பாதுகாக்கப்படல் வேண்டும். எவ்வாறாயினும் நாம் வாழும் உலகில் காணப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். அதேபோல் பயங்கரவாதத்தின் மாறுபட்ட தோற்றம் தொடர்பாக மிகவும் கரிசனையோடு உள்ளோம்.

தனியார் கொள்கைகளுக்குப் பதிலாக பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு எமது அயல் நாடுகள் மற்றும் உலகளாவிய நட்பு நாடுகளுடன் உபாய அணுகு முறையுடன் செயற்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுதுவதில் நவீன தொழில்நுட்பமானது முக்கிய பங்காற்றுகின்றது.நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். நாட்டின் பாதுகாப்பு என்ற விடயத்தில் விட்டுக் கொடுப்புகளுக்கு ஒரு போதும் இடம் கிடையாது.

2009 இற்குப் பிந்திய காலப் பகுதியில் கடந்த ஆட்சியின் பொது பெருளாதார வளர்ச்சிப் போக்கானது துரிதமாக வளர்ச்சியடைந்தது எனக் காட்டப்பட்டு எவ்வாறாயினும், இவ்விலக்கங்கள் பிரதிபலிப்பதைப் போன்று நாட்டின் சராசரிப் பிரஜைகள் நன்மையடைந்ததாக தெளிவில்லை. ஒரு புதிய பொருளாதார மைல்கல்லை அடைவதற்கான பிரதான சுலோகமாக காண்பிக்கப்பட்ட விடயம் என்னவெனில் 2016 ஆம்ஆண்டில் நடுத்தர வருமானம் என்ற அந்தஸ்தை அடைவதாகும்.

ஆனால் சர்வதேச கண்டனங்கள் மற்றும் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் அரசியல்வாதிகளின் வாய்ப் பேச்சுக்களானது சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படாமையினால் கடந்த அரசாங்கத்தினால் இலங்கையானது முதலீட்டாளர்களின் உரிய விருப்பத்தேர்வாக இருக்கவில்லை. இதனால் இலங்கையானது வியாபாரம் செய்வதற்கு சாதகமான நாடுகளின் பட்டியல் தரப்படுத்தலில் பின்தள்ளப்பட்டதோடு நிலைமையும் பாதிப்படைந்தது.

நாட்டின் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபை காரியாலயத்திற்கு முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அச்சுறுதலை மேற்கொண்டதையும் அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முன்னாள் தலைவர் இளநீரை கொண்டு வந்ததையும் நாட் மக்கள் கண்டு கொண்டனர்.

அதுமிகச் சிறந்த அரசியல் நாடகமாக இருக்கலாம். ஆனால் அதன் மூலம் நாடு மிகவும் பாதிப்படைந்தது. எதிர்பார்த்த வெளிநாட்டு முதலீடுகள் அடையப்படவில்ல.

மற்றும்நட்பு நாடுகளினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட ஜீ. எஸ். பீ. (மிஷிஜி+) போன்ற சலுகைகளும் நீக்கப்பட்டன. நாட்டின் பொருளாதாரமானது மெதுவாக ஓர் இரண்ட நிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டதோடு சர்வதேச பொருளாதாத் தடைகளும் குறுகிய தூதரத்தில் காணப்பட்டன.

கடந்த அரசாங்கத்தின் திட்டமிடப்படாத உட்கட்டமைப்பு வசதிகளான அதி வேகப் பாதைகள். துறைமுகங்கள் மீது சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய வட்டியிலான படுகடன்கள் நாட்டிற்குப் பாரிய படுகடன் சுமையை ஏற்படுத்தியது மாத்திரமல்லாமல் பாரிய அளவிலான படுகடன் தீர்ப்பனவுகளையும் ஏற்படுத்தியது. இந்த அதி செலவு கூடிய படுகடன்களானது முதிர்ச்சியடையும் படுகடன்களை திருப்பிச் செலுத்துவதற்குப் பதிலாக நீண்டகால முதலீடுகளானது மேற்கொள்ளப்பட்டதோடு சில முதலீடுகள் எவ்வித வருமானத்தையும் உழைக்கப் போதியதாக இல்லை.

இவ்வகையான முதலீடுகளானது இலங்கைக்கு மாத்திரம் பொதுவான அனாவசியமான முதலீடுகள் எனக் குறிப்பிடலாம். ஏனென்றால் அவ்வரசாங்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட விமான நிலையத்தில் உள்ளூர் விமானங்கள் கூட தரை இறக்கப்படுவதில்லை.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் கூட எதிர்பார்க்கப்பட்டது போல கப்பல் துறை நடவடிக்கைகள் தொடர்பாக மத்தியப்படுத்தப்பட்டதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அத்துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கையும் குறைவு என்பது நாம் அறிந்த உண்மையாகும்.

இது எவ்வாறு இருப்பினும், அத்துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானத்திற்குப் பங்களிப்புச் செய்த அரச தலைவர்களின் பெயர்களானது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவற்றைப் பார்வையிட அங்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மத்திரமே காணக்கிடைக்கின்றது.

எமக்குத் தெரிந்த வகையில் கடந்த அரசாங்கத்தில் குறிப்பிட்ட ஒரு குழுவினரே பலன்களை அனுபவித்தனர் அதாவது அரசியல் நண்பர்கள் மற்றும் தலைவரின் புகழ் பாடியவர்களுக்கு விசேட சலுகைகள் மற்றும் நன்மைகள் செய்து கொடுக்கப்பட்டன. கெளரவ சபாநாயகர் அவர்களே, பல்வேறுபட்ட அதிகாரபூர்வமான மற்றும் உத்தியோகப்பற்றற்ற மூலங்களில் இருந்து நாம் அறிந்த கொண்டவை மிகவும் கொஞ்சமாகும்.

இவை மீதான விசாரணை செயன்முறையானது மிகவும் நீண்ட காலம் செல்லலாம். ஆனால் காணப்படும் சாட்சிகளானது யாராலும் மறுதலிக்க முடியாதுள்ளது. தேசப்பற்றுள்ள அனைத்து நாட்டப் பிரஜைகளிடமும் கேட்டுக் கொள்வது என்னவென்றால் நாட்டில் காணப்படும் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உண்மை நிலைநாட்டப்படும் வரையில் பொறுமையாக இருக்கும்படி வேண்டுகின்றேன்.

மேலும் நான் இச்சந்தர்ப்பத்தில் தாய்நாட்டின் பிரஜைகளிடம் வேண்டிக் கொள்வதென்ன¦ வன்றால் வெளிநாடுகளில் நீங்கள் வைத்திருக்கும் பணங்களை இங்கே முதலீடு செய்யுங்கள். இச்சந்தர்ப்பத்தில் நாடானது. அத்தகைய பணத்தின் அவசியத்தை வேண்டி நிற்கின்றது.

முன்னைய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு விட்டுவிடப்பட்ட பிரச்சினைகளில் நாம் இன்னும் சிக்கியுள்ளோம். வெறும்வார்தைகளினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார செயலாற்றுகை தொடர்பான அவர்களது பிரசாரம் அக்காலத்தில் உச்ச நிலையில் காணப்பட்டதுடன் அவை வெற்றுப் பாத்திரம் பாரிய சத்தத்தை ஏற்படுத்து போன்று தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் புதிய பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளதுடன் அவை, முற்றுமுழுதாக மாற்றமானதொரு தோற்றத்தினைக்காட்டியது.

உண்மையில் பொருளாதாரமானது 2013 இல் 3.5 சதவீதத்தினாலும் 2014 இல் 4.5 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைந்தது. ஒப்பீட்டு ரீதியில் இவை உருமாற்றப்பட்ட புள்ளிவிபரங்களாக இருந்து கவலைக்குரியதாகும். இப்பின்னணியில் 2015 இல் பொருளாதார வளர்ச்சியானது ஏறக்குறைய 6 சதவீதமாக இருக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது அடைவுகளையும் வெற்றிகளையும் நாம் விட்டுவிடப்போவதில்லை. ஆனால் புதுப்பிக்கப்பட்டதொழில் முயற்சியுடன் போலிகள் இல்லாதாக்கப்பட்டு அடுத்த சில வருடங்களின் போது வருடாந்த வளர்ச்சியினை 7 - 8 சதவீதமாக மாற்றுவது எமது இலக்காகும். இந்த ஆவணமானது அடையப்பெற்ற வளர்ச்சி மடங்களை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடாக அமைவதுடன் அதற்கான சக்தியினையும் வழங்கும்.

ஜனாதிபதி, கெளரவ பிரதம மந்திரி, ஏனைய அமைச்சரவை சகாக்கள் மற்றும் எமது அரசாங்கம் சார்பில் நான் எமது தாயகத்தினை சுபீட்சம் நோக்கிய பாதையில் முன்னெடுத்து செல்வதற்கு ஒன்றிணையுமாறு பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் நட்புக்கரம் நீட்டுகின்றேன்.

நான் எமது பொருளாதாரத்தின் சரியான நிலைமைகளை தெளிவுபடுத்தி யுள்ளேன். வருடங்களாக நிலவும் இந்த சீரழிவு நிலையிலிருந்து மீளுகை பெறுவதற்கு நாம் ஒன்றிணையாது விடின் நாம் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகள் தேய்வடையும். “இருட்டினைச் சபிப்பதனை விடுத்து ஒரு மெழுகுவர்த்தியினை ஒளியேற்றி இருட்டினை விளக்கி விடுவோம்.”

இந்தப் பின்னணியில் எமது அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டத்திற்கு உட்பட்டுள்ள முன்மொழிவு களை முன்வைப்பதற்கு விரும்புகின்றேன். எமது அரசாங்கம் இன.

மத அல்லது சமூக இடையூறுகளை களையும் அரசாங்கமாகவும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நன்னிலைக்காக ஒற்றுமையாக அர்ப்ப ணிப்புடன் செயற்படும் ஒரு அரசாங்கமாகவும் உள்ளது என்றார்

ad

ad