சனி, நவம்பர் 14, 2015

அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசம்


தமிழ் அரசியல் கைதிகளின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் 7ஆவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொது மன்னிப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளில் பலரது உடல் நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை முதல் சிகிச்சையை பகிஷ்கரிப்பதற்கும் தீர்மானித்திருப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் மயக்கமுற்ற நிலையில் 10க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிறைத்திரும்பியிருந்தனர்.
இதேவேளை நேற்றைய தினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அரசியல் கைதிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.