புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2015

ரஷ்ய அதிபர் புதின் நண்பர் அமெரிக்க ஹோட்டலில் மர்ம மரணம்: பரபரப்பு தகவல்கள்

 ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நெருங்கிய நண்பரும், பிரபல தொழிலதிபருமான மிகயீல் லெஸின், அமெரிக்காவின்
நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

புதினின் மிக நெருங்கிய நண்பர்களில் குறிப்பிடத்தக்கவரான மிகயீல், ரஷ்ய  அரசின் ஊடகத்துறையில் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் என்பதும், இவரது பதவி காலத்தில் ரஷ்யாவில் ஊடகங்களுக்கு அதிக அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன  என்பதும் குறிப்பிடத்தக்கது.
1999 முதல் 2004 ம் ஆண்டுவரை அந்நாட்டின் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி துறையின் அமைச்சராகவும்  இவர் பொறுப்பு வகித்துள்ளார். ரஷ்ய  அரசுக்கு சொந்தமான பிரபல ‘ரஷ்யா டுடே’ செய்தி சேனல் உருவாவதற்கு இவர் மூலக்காரணமாக திகழ்ந்ததாகக்  கூறப்படுவதுண்டு.

தனது பதவிக்காலத்தில் பலகோடி டாலர்கள் மதிப்பில் ஊழல் செய்து,  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவர் சொத்துகளை வாங்கி குவித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அமைந்துள்ள வாஷிங்டன் நகரின் மையப்பகுதியில் இருக்கும் டுபான்ட் சர்க்கிள் நட்சத்திர ஓட்டலில்,  மிகயீல் லெஸின் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, வாஷிங்டனில் உள்ள ரஷ்ய  தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மிகயீல் மரணம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad