புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2015

பெற்றோர்களே பெண் பிள்ளைகளை அவதானம்:யாழ் பிரபல பெண்கள் பாடசாலையில் ஆபாச வீடியோ பார்த்த மாணவிகள்

யாழ் நகரிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உ
யர்தர வகுப்பு மாணவிகளின் சில்மிசம் கையும் களவுமாக பாடசாலை ஆசிரியரிடம் பிடிபட்டுள்ளது.இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,யாழ் நகரிலுள்ள ஒரு பிரபல பெண்கள் பாடசாலையில்(பெயரை பாடசாலையின் நற்பெயர் காரணமாக வெளியிடவில்லை) உயர்தர வகுப்பு மாணவிகள் தங்கள் கைத்தொலைபேசியில் ஆபாச வீடியோ பார்த்துக்கொண்டிருந்த போது வகுப்பாசிரியரிடம் மாட்டிக்கொண்டுள்ளனர்.மாணவிகள் 6பேர் ஒன்றாக வகுப்பறையில் நீண்ட நேரம் கூடியிருந்துள்ளனர்.இதனை அந்த வகுப்பறைக்கு அருகிலுள்ள வகுப்பறை ஆசிரியர் அவதானித்துள்ளார்.
சத்தம் மிகுதியாக வந்ததால் குறித்த ஆசிரியர் மாணவிகளிடம் சென்று எதற்காக சத்தம்போடுகிறீர்கள்? உங்கள் பாடஆசிரியர் வரவில்லையா எனக்கேட்டதற்கு பாட ஆசிரியர் வரவில்லை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆயினும் பாட ஆசிரியர் வராதுவிடின் நுாலகத்திற்கு மாணவர்கள் சென்று படிப்பதே வழமையாகும்.ஆனால் வகுப்பறையிலும் இருந்து சில மாணவர்கள் கற்பதுண்டு.இதனை வழமையானதொன்றாக எடுத்துக்கொண்ட ஆசிரியர் மீண்டும் தனது வகுப்புக்கு சென்று பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
மீண்டும் குறித்த மாணவிகள் சத்தம் போட ஆரம்பித்துள்ளனர்.இதனால் குறித்த ஆசிரியர் கதவு ஓரமாக நின்று அவதானித்துள்ளார்.மாணவிகள் தொலைபேசி ஒன்றை பார்த்து வித்தியாசமான ஒலியை எழுப்பிக்கொண்டிருந்துள்ளனர்.விரைந்து செயற்பட்ட ஆசிரியர் தொலைபேசியை மாணவிகளிடமிருந்து பறித்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார்மாணவிகள் தொலைபேசியில் ஆபாச வீடியோ பார்த்துக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.குறித்த மாணவிகளை கடுமையாக எச்சரித்த அந்த ஆசிரியர் தொலைபேசியை பறித்து சென்றுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் அதிகம் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பாடசாலை அதிபர்கள் இது குறித்து அக்கறை காட்டுவதில்லையெனவும் பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பாடசாலை அதிபரிடம் தொடர்பு கொண்டபோது தான் இதுபற்றி விசாரணை மேற்கொள்வதாகவும் மாணவிகளின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ad

ad