புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2015

ஆட்டம் காணும் மஹிந்தவின் கூட்டணி! ஆளாளுக்குத் தெரியாமல் கழன்று கொள்ளும் பிரமுகர்கள்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நாடாளுமன்றக் கூட்டணியின் அடித்தளம் ஆட்டம் கண்டுகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தல் முடிவடைந்த கையோடு மஹிந்த தரப்புக்கு சுமார் 70 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதுடன், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் உரிமை கோரப்பட்டது.
அதன் பின்னர் மஹிந்த அணியில் இருந்த சிலர் கடைசிநேரம் வரை மௌனமாக இருந்து விட்டு, அமைச்சரவை நியமனத்தின் போது மைத்திரியின் காலடியில் தஞ்சம் புகுந்திருந்தனர். இதன் காரணமாக மஹிந்த தரப்பு 56 உறுப்பினர்கள் வரை கீழிறங்கியிருந்தது.
அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்த மஹிந்த அணியினர், தங்களுக்கு 46 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனாலும் கடைசியில் அவர்களுக்கு எஞ்சியிருப்பது 26 உறுப்பினர்கள் மட்டுமே என்பது ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது தெரியவந்தது.
தற்போது இதிலும் ஆறு பேர் அளவில் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ள உத்தேசித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் பிரகாரம் கடைசியில் ராஜபக்ஷ குடும்பம், குணவர்த்தன குடும்பம் மற்றும் விமல் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே ராஜபக்ஷ அணியில் நிலைத்திருக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ad

ad