புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2015

சுவிஸ் யங் ஸ்டார் கழகம் யங் பேர்ட்ஸ் சுற்றுக்கிண்ணத்தை வென்றது

நேற்று சுவிஸ் லுசெர்ணில் நடைபெற்ற யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுபோட்டியில்
 இறுதியாட்டத்தில்  யங் ஸ்டார்  கழகம் இளம்சிறுத்தைகள் கழகத்தை   என்ற ரீதியில் வென்று  முக்கியமான இந்த சுற்றுக்கிண்ணத்தை  கைப்பற்றியது முப்பது கழங்கள் பங்குபற்றிய இந்த சுற்றில்  எல்லாப் போட்டிக்களிலும்   அபார வெற்றியை பெற்று இறுதி ஆட்டத்துக்குள்  நுழைந்த ஒரு கழகமாக யங் ஸ்டார்  திகழ்ந்தது முதலாம் இடத்துக்கான வெற்றிக்கிண்ணம்  சுற்றுப்போடிக்கான  சுழல் கோப்பை (தொடர்ந்து இரண்டாவது தடவை ),ஆயிரம் பிராங் பணப்பரிசு , சிறந்த ஆட்ட நாயகன் விருது *(நிரூபன் ) சிறந்த வீரர் விருது(நிசு ) என்பவற்றை யங் ஸ்டார்  தட்டி சென்றது .இளம் சிறுத்தைகளின்  பிரேமானந்தன் தனுசனுக்கு பாதுகாப்பு  ஆட்ட வீரர் விருதும் பயிற்சியாளர் செல்வாவுக்கு பயிற்சியாளர் விருதும் கிடைத்தன
மேலதிக இணைப்பு
.கடந்த (29.11.2015) ஞாயிறுஅன்று சுவிட்சர்லாந்து லுசேர்ன்நகரில் பிரமாண்டமாக நடத்தபட்ட யங் பேர்ட்ஸ் உள்ளரங்கஉதைபந்தாட்டசுற்றுப்போட்டி பலரையும் ஆச்சரியமூட்டும் வகையில் சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது இந்தசுற்றுப்போட்டியின் நிகழ்வுகள்மற்றும்இறுதியாட்டம்என்பவற்றைதீபம்தொலைக்காட்சிமுதன்முதலாக புலம்பெயர்தமிழர்வரலாற்றில்நேரடியாகஒலிபரப்புசெய்து சாதனைபடைத்தது இந்த நிகழ்வுகளைதீபம்தொலைக்காட்சியில் நேரடிவர்ணனைமூலம்வழங்க திடீரென என்னை அழைத்திருந்தார்கள் எந்தவிதஆயத்தமும்இன்றிநானும்மனோவும்சிறப்பாக செய்திருந்தோம்எனலாம் கிடைக்கின்றவாழ்த்துக்களைபார்க்கும்பொதுஎனக்கு அறியமுடிகின்றதுஉண்மையிலேழேஇந்தபாராட்டுக்களும்வாழ்த்துக்களும்தீபம்தொலைக்காட்சிக்கும்அதன்சுவிஸ் பொறுப்பாளர்செல்வா அண்ணனுக்கும்யங்பேர்ட்ஸ்கழகதுக்குமேசேரவேண்டும் இந்தநிகழ்ச்சியைவழங்க என்அனுபவத்திலும்திறமையிலும் நம்பிக்கைவைத்துதன்னோடுஎன்னை அழைத்து மகிழ்வித்தஅன்புநண்பன்மனோ (ம.மனோகரன்.மொஸ்ஸடோர்ப்பேர்ண்) அவர்களுக்குஎன்இதயபூர்வமானநன்றிகள்.இந்தசுற்றுபோட்டியின் முக்கிய அம்சங்களாக இரண்டைக் குறிப்பிடாகவேண்டும் 1. முதலாம்,இரண்டாம்,மூன்றாம் இடத்தை அடைந்த கழகங்களுக்கு முறையே 1000,300,200 பிராங்குகள் பரிசு வழங்கி ஊக்குவித்தமை2.புலம்பெயர்தமிழர் வரலாற்றில் முதல் தடவையாக சுற்றுப்போட்டி நிகழ்வுகளை நேரடியாக தீபம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியமை 
சுவிஸ்விளையாடடுத்துறைவரலாற்றில் சாதனையாகபதிவிடவேண்டியது. ஐரோப்பியநாடவர்கள்கூட செய்ய கடினமானஒரு செயல்இது. பொருளாதாரம்தொழில்நுட்பம்வசதிஎன்பனஒருங்கேஅமைந்தால்ஒழியஇதுபோன்றநேரடிஒளிபரப்புகளை செய்வது இயலாதகாரியமாகும்ஓர் அற்புதமான சுற்றுப்போட்டியை நடத்திக்காட்டி மற்றையகழகங்கள் வீரர்கள் அமைப்புகளுக்கு ஓர்முன்மாதிரியாக திகழ்ந்தயங்பேர்ட்ஸ்கழகத்தைஎவ்வளவுபாராட்டினாலும் பரவாயில்லை .முப்பதுகழகங்களை இணைத்துகாலைஎட்டுமணிமுதல் இரவு பத்துமணிக்கும்மேலாக நிகழ்வுகளைஒருங்கிணைத்து கட்டுக்கோப்பு நேரம்தவறாமை விருந்தோம்பல் துல்லியமான கணிப்பீடு பதிவிடல் தகவல்நுட்பம்சேர்க்கை எனஅசதிஇருந்தார்கள்கழகத்தின் தொண்டர்களோடுநிர்வாகமும் மகளிர்அணியின்செயல்பாடு கழஅங்கத்தவர்களின் பிரித்துவழங்கபட்ட கடமை துறைகளின்ஈடுபாடு அனைதுக்கழகங்களுடனான சிநேகபூரவமான அரவணைப்பு அளவளாவல் கச்சிதமான ஒழுங்கமைப்பு எல்லாமே பங்குபற்றிய கழகங்கள் பார்வையாளர்களை கவர்ந்திருந்தது மீண்டும் தீபம்செல்வா,மனோ, யங்பேர்ட்ஸ்அஜி தேனு மற்றும்யன்க்பேர்ட்ஸ் கழகத்தவர்அனைவருக்கும்என்மனமார்ந்தநன்றிகள் தொடர்ந்தும்உங்களோடு அன்பால்ஆதரவால்இணைந்திருப்பேன்

ad

ad