புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2015

மக்கள் நல கூட்டு இயக்கம் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியாக செயல்படும் - வைகோ



ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளின் மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (திங்கள்கிழமை) காலை சென்னையில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. 

இதில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் , மக்கள் நல கூட்டு இயக்கம் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியாக செயல்படும் என்று அறிவித்தார். இந்த கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டங்கள் அடங்கிய 37 பக்க அறிக்கை ஒன்றும் புத்தகமாக வெளியிடப்பட்டது.பின்னர் வைகோ அளித்த பேட்டியில்,

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் நல கூட்டணி இருக்கும். அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. அதே நேரத்தில் ஒத்த கருத்துக்களை மற்ற கட்சிகள் மக்கள் நல கூட்டணியில் சேரலாம்.

மக்கள் நல கூட்டு இயக்கம் மக்கள் நல கூட்டணியாக மாறினாலும் கூட்டு இயக்கம் தனியாக தொடர்ந்து செயல்படும். அதில் தற்போதுள்ள 4 கட்சிகள் மட்டுமே இடம் பெற்று இருக்கும். அது நிரந்தரமான அமைப்பாக இருக்கும்.

தமிழகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து மக்கள் நல கூட்டு இயக்கம் செயல்படும்.

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணி சார்பில் வாக்காளர்களை சந்திக்க உள்ளோம். நிச்சயம் தேர்தலில் நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றார்.

மக்கள் நலக் கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையில், மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளை எதிர்ப்போம், தமிழகத்தில் ஊழல் ஒழிப்பு, வெளிப்படையான அரசு நிர்வாகம், பூரண மது விலக்கு, இந்துத்துவ மதவெறி சக்திகளை முறியடித்தல், சாதி வெறி சக்திகளை எதிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

ad

ad