புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2015

தற்கொலை செய்துகொண்ட செந்தூரனுக்கு அஞ்சலி! வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை


வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக   வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா அறிவித்துள்ளார்.
இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் தியாகி செந்தூரனை நினைவு கூரும் வகையிலும் அவரது தற்கொலை காரணமாக ஏற்படக்கூடிய நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டும் இவ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பெற்றோருடன் வீடுகளில் தங்கி இருக்குமாறு கேட்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட செந்தூரனுக்கு அஞ்சலி; வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை   
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறமாட்டாது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரத்தியேக செயலாளர் ஆ.க.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவே, நாளைய தினம் பாடசாலைகள் இடம்பெறமாட்டாது அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தினத்திற்கு பதிலாக பாடசாலை இடம்பெறும் தினம் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad