புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2015

ருமலை மாணவர்கள் படுகொலைச் சம்பவம் : குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினமானதல்ல

2006ஆம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகெலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை வரை கடினமான விடயம் அல்லவென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நீதி மற்றும் கொள்கை வகுப்பு பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் இலங்கையின் உள்ளூர் ஊடகமொன்றிற்கு இந்த கருத்தினைத் வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இந்தச் சம்பவம் இடம்பெற்று 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அதன் குற்றவாளிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவும் இல்லை, கைது செய்யப்படவும் இல்லை.இந்த சம்பவத்தை பொறுத்தவரை, சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் தந்தைகளில் ஒருவரான வைத்திய கலாநிதி மனோகரனின் சாட்சியப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கடற்படையினரே இதற்கு காரணம் என்று முன்னர் கூறப்பட்டது.

எனினும் இந்த சம்பவத்திற்கு விசேட அதிரடிப்படையினரே காரணம் என்று கூறப்பட்டு 12 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் சாட்சியங்கள் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.இந்த நிலையில் சம்பவத்தில் விசேட அதிரடிப் படையினரே ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டிருந்தபோதும் சம்பவத்தின்போது அவர்களின் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையில், இந்தச் சம்பவத்தின் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவது இலங்கை அரசாங்கத்துக்கு கடினமான பணியாக இருக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad