புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

ரியல் மட்ரிட் பயிற்சியாளராக தொடரவுள்ளார் பெனிட்ஸ்

rafa_2505973b
பார்சிலோனாவிடம் 4-0 என்ற ரீதியில் சொந்த மைதானத்தில் ரியல் மட்ரிட் தோல்வியடைந்த பின்னரும், அக்கழகத்தின் ஆதரவு,
அக் கழகத்தின் பயிற்சியாளர் ரஃபேல் பெனிட்ஸுக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கோடை காலத்திலேயே முன்னைய பயிற்சியாளர் கார்லோ அன்சிலோட்டியை, 55 வயதான பெனிட்ஸ் பிரதியீடு செய்திருந்தார். எனினும், பார்சிலோனா அணியுடன் பெற்ற தோல்வியை அடுத்து, ரியல் மட்ரிட் அணியின் ஆதரவாளர்கள், பெனிட்ஸை பதவியிலிருந்து அகற்றுமாறு கோச­மெழுப்பியிருந்தனர்.
இந்த நிலையிலேயே, இடம்பெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டத்தையடுத்து, கருத்து தெரிவித்த ரியல் மட்ரிட் கழகத் தலைவர் புளோ ரென்டினோ பெரேஸ், பெனிட்ஸூக்கு, தங்களது அனைத்து ஆதரவும் நம்பிக்கையும் காணப்படுவதாக கூறியுள்ளார்.
தற்போதே பெனிட்ஸ் தனது பணியைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்த பெரேஸ், அவரை, அவரின் குறிக்கோளை அடைய விடுமாறும் தெரிவித்தார்.
எனினும், தற்போதைய நிலையைப் பற்றியே தான் கதைப்பதாகவும், எதிர்காலத் தில் என்ன நடக்கும் என்று தன்னால் கூறமுடியாது என்றும், ஆறு மாதத்தில் என்ன நடக்கும் என்று எவராலும் கூற முடியாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, ரியல் மட்ரிட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெனிட்ஸுக்கு கீழ் விளையாடுவதில் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிவித்ததாக வெளியான கருத்துக்களை பெரேஸ் மறுத்திருந்ததோடு, பெனிட்ஸை பற்றி ரொனால்டோ தன்னிடம் ஒருபோதும் எதனையும் கூறவில்லை எனத் தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு கழகத்தின் தலைவராக இருந்து இராஜினாமா செய்து, பின்னர் மீண்டும் 2009 ஆம் ஆண்டு கழகத்தின் தலைவராக பதவியேற்ற பெரேஸும், கோபமடைந்த இரசிகர்களினால் இலக்காகியிருந்தார்.
பார்சிலோனா அணியிடம் தோல்வியைத் தழுவிய ரியல் மட்ரிட் அணி, புள்ளிகள் தரவரிசையில் பார்சிலோனா அணியை விட 6 புள்ளிகள் பின்தங்கியுள்ளதோடு, அட்லெட்டிக்கோ அணியை விட 2 புள்ளிகள் பின்தங்கியுள்ளது.

ad

ad