வியாழன், நவம்பர் 05, 2015

யாழ். மாவட்ட ரீதியாக நடைபெற்று வரும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்றில் இறுதியாட்டத்துக்குள் நுழைந்தது யங்கென்றிஸ் வி.கழகம்.

3
யாழ். மாவட்ட ரீதியாக நடைபெற்று வரும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்றில் பொம்மர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி
இறுதியாட்டத்துக்குள் நுழைந்தது யங்கென்றிஸ் வி.கழகம்.
வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகம் யாழ். மாவட்ட ரீதியாக நடத்தும் உதைப் பந்தாட்டத் தொடர் குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் வதிரி பொம்மரஸ் விளையாட்டுக் கழகமும் இளவாலை யங்கென்றிஸ் விளையாட்டுக் கழகமும் மோதின.
ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தி லேயே யங்கென்றிஸ் சார்பாக முதல் கோல் பதிவானது. இரு அணிகளும் பெரும் போராட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் கோல் கணக்கில் மாற்றம் ஏற்படவில்லை. வேறெந்த கோல்களும் பதியப்படாத நிலையில் யங்கென்றிஸின் ஆதிக்கத்துடனேயே முடி வடைந்தது முதல்பாதி.
முதல் பாதியின் ஆரம்பத்தைப் போல இரண்டாம் பாதியின் 5ஆவது நிமிடத்திலும் கென்றிஸ் சார்பாக இரண்டாவது கோல் பதிவாக யங்கென்றிஸின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியது. 7ஆவது, 11ஆவது, 19 ஆவது நிமிடங்களில் கோல்கள் யங்கென்றிஸ் சார்பாக குவிக்கப்பட்டது. பொம்மரஸின் உதயராஜ் இறுதி நிமிடத்தில் ஆறுதல் கோலை அடிக்க முடிவில் 5:1என்று வெற்றியீட்டி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது யங்கென்றிஸ் விளையாட்டுக்கழகம்.