புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2015

ரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும் – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா


சகல அரசியல் கைதிகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி பொதுமன்னிப்பின் அடிப்படையில் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென

வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில்,
அரசியல் கைதிகளில் குற்றம் சுமத்தப்படாதவர்களை மட்டும் பிணையில் விடுவிப்பது என்பது அரசியல் விவகாரத்தில் அரசின் தெளிவற்ற தன்மையை காட்டுகின்றது.
பிணையில் விடுவது என்பதே அவர்கள் தொடர்ந்து வழக்குகளுக்கு செல்ல வேண்டிய தேவையும் தொடர்ந்தும் அவர்கள் மேல் ஒர் கட்டுப்பாட்டை விதிக்கின்ற ஒர் செயலாகும்.
அத்துடன் இன்று குற்றம் காணப்பட்டுள்ள பலரும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர்.
ஆதலினால் அரசு எவ்வித நிபந்தனையுமின்றி இவர்களை யாவரையும் அரசியல் கைதிகளாக கணக்கெடுத்து பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ad

ad