புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2015

வேதாரண்யத்தில் நித்யானந்தா சீடர்கள் மீது ஆத்மானந்தா சீடர்கள் தாக்குதல்


நாகை மாவட்டம் வேதாரண்யம் வடக்கு வீதியில் பல ஆண்டுகளாக சாதுக்கள் மடாலயம் இயங்கி வருகிறது.  இந்த மடாலயம் கரூரை சேர்ந்த ஆத்மானந்தா பொறுப்பில் உள்ளது. அதை ஆத்மானந்தாவின் உதவியாளர் ஞானேஸ்வர நந்தா நிர்வகித்து வருகிறார்.

பெங்களூரை சேர்ந்த நித்யானந்தாவிடம் ஆத்மானந்தா,  சேலத்தில் நடத்தும் கல்லூரிக்காக ரூ. 2 கோடி நிதி பெற்றதாக தெரிகிறது. இதனால் மடாலயத்திற்கு சொந்தம் கொண்டாடி கடந்த ஒரு ஆண்டுகளாக இந்த மடாலயத்தில் நித்யானந்தா சீடர்களும் தங்கி பூஜை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டு வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நாகை வருவாய் கோட்டாட்சியர் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த மடாலயத்தில் தங்களுக்கும் உரிமை உள்ளதாக கூறி நித்யானந்தா சீடர்கள் நாகை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இந்த நிலையில் ஞானேஸ்வர நந்தா ஆதரவாளர்கள் மடாலயத்துக்கள் புகுந்து நித்யானந்தா சீடர்களான சுத்தானந்தா, நிருவி கல்பனாந்தா, யோகமயானந்தா, ஞான பிரபா ஆகியோரை அடித்து உதைத்து அவர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகள் மற்றும் பூஜை பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ஞானபிரபா வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருவாரூர் மடப்புரத்தில் சோமநாதர் சுவாமி கோவிலில் தங்கி இருந்த நித்யானந்தா சீடர் ராகவன் அக்கோவிலில் பூஜை செய்து வரும் அர்ச்சகர் ராமமூர்த்தியை கழுத்தை பிடித்து நெரித்து கொல்ல முயன்றதாக திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நித்யானந்தா சீடர் ராகவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ad

ad