சனி, நவம்பர் 14, 2015

வடமாகாண மேசைப்பந்தாட்டத் தரப்படுத்தலில் கொக்குவில் இந்து மாணவன் முதலிடம்

2
யாழ். மாவட்ட மேசைப்பந்தாட்ட சங்கத்தின் ஆண்கள் பிரிவு 10வயது வீரர்களுக்கான தரப்படுத்தலில் கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவன் பிரசாந் முதலிடத்தை பிடித்துள்ளார்.

வடமாகாணத்தின் மேசைப்பந்தாட்ட வீரர்களைத் தரப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் மேசைப்பந்தாட்டத் தொடர் ஒன்று
முன்னெடுக்கப்பட்டது. இதன்படி குறித்த தொடரின் தரப்படுத்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.
10வயது ஆண்கள் பிரிவில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் பிரசாந் 25 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், ஆனைக்கோட்டை றோமன் கத்தோலிக்க தமிழக் கலவன் பாடசாலையின் மாணவன் துசியந்தன் 20 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், அதே பாடசாலையின் யதுசன் 15 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும், சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவன் சியாம் 15 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தினையும் பெற்றனர்.
யாழ். இந்துக்கல்லூரி மாணவன் தவிஸ்டின் மற்றும் யாழ். மத்திய கல்லூரி மாணவர்களான தனுரதன், ஹரிஸ், நியுஸ்சன் நால்வரும் காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனர். அதனால் புள்ளிப்பட்டியலில் அடுத்த அடைவு மட்டத்தில் அவர்கள் நால்வரும் உள்ளனர்.