புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2015

தற்கொலை செய்த மாணவனின் கடிதம் தொடர்பில் இருவேறு கோணங்களில் விசாரணை

யாழ்.கோண்டாவிலில் புகையிரதத்தின் முன் பாய்ந்து பாடசாலை மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

18 வயதான ராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது சடலத்துக்கு அருகே காணப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கடிதம் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த அப்பியாசக் கொப்பியில் இருந்த அந்த கடிதமானது உண்மையில் தற்கொலை செய்ய முன்னர் அந்த மாணவனினாலேயே எழுதப்பட்டதா? அல்லது சம்பவத்தின் பின்னர் எவரேனும் அதனை அங்கு கொண்டுவந்து போட்டனரா என்பது குறித்து இதன் போது விசேடமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரி­வித்தார்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சஞ்சீவ ஜயகொடியின் கீழ் விசேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இரு வேறு கோணங்களில் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ad

ad