புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2015

வடக்கு முதல்வரை நீக்குவது தொடர்பில் நான் நடுநிலைவாதி

வடமாகாண அமைச்சர்களை மாற்றுதல் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரை நீக்குதல் ஆகிய விடயங்கள் தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு விடயங்களிலும் நான் தலையீட்டை மேற்கொள்ளாமல் நடுநிலையாகச் செயற்படுவேன் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். 

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீக்குமாறு கட்சியிடம் கோரியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலியாவில் வைத்துக் கூறியுள்ளமை மற்றும் வடமாகாண அமைச்சர்களை மாற்றுமாறு உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளமை தொடர்பில் அவைத்தலைவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் தொடர்ந்து கூறுகையில், 'வடமாகாண முதலமைச்சரை நீக்குமாறு கோரும் விடயத்தில் நான் அவருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயற்படமாட்டேன். அது கட்சியின் நிலைப்பாடு. அமைச்சரவையை மாற்ற வேண்டும் என சுமார் 20 பேர் கொண்ட உறுப்பினர்கள் கலந்துரையாடியதாக ஊடகங்களில் செய்திகள் வாயிலாக அறிந்தேன். அந்த விடயத்தில் நான் நடைபெறும் விடயங்களை அவதானிப்பனாக இருப்பேனே தவிர, சரி, பிழை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கமாட்டேன். இதுவே எனது பதவிக்குரிய நிலைப்பாடு ஆகும்' என்று கூறியுள்ளார்.

ad

ad