புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2015

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் யாழ். உதயன் பத்திரிகைக்குச் சென்று அங்கு உதயன் குழுமத்தின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவனை சந்தித்தார். குறித்த சந்திப்பின் போது கடந்த காலத்தில் உதயன் பத்திரிகைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், மற்றும் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளையும் பார்வையிட்டார் சமந்தா பவர். அதன்பின்னர் உதயன் குழுமத் தலைவர் ஈ.சரவணபவனை சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போது சமந்தா பவர் கருத்து தெரிவிக்கையில், நானும் ஒரு ஊடகவியலாளர் தான். அரச வலுப்படுத்துவதில் பத்திரிகையில் உள்ள ஒவ்வொருவரும் முக்கிய பங்காற்றுகின்றீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை நான் அறிவேன். உங்களுடைய தைரியத்தை கண்டு வியப்படைகிறேன். கடந்த காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறுவதை உறுதி செய்ய வேண்டும். நான் ஒரு அரசை விமர்சிப்பதோ, அல்லது அரசு பக்கம் இருந்து கொண்டு விமர்சனங்களை எதிர்கொள்வதோ இரண்டுமே முக்கியம். அரச அதிகாரிகளுக்கு தெரியாத விடயங்கள் கூட நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். நீங்கள் குமிழ்களை உடைப்பவராகவும் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களாகவும் இருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல எங்களுடைய நாட்டில் பத்திரிகைத்துறை மிகவும் கடினம் ஆனால் அங்கு பாதுகாப்பு உண்டு. ஆனால் இங்கு பாதுகாப்பு பிரச்சினை இருந்தும் தொடர்ந்தும் மக்களுக்காக குரல் கொடுக்கிறீர்கள்.நீங்கள் செய்த தியாகம் அளப்பெரியது. இதனை நினைத்து நான் இன்னமும் வியப்படைகிறேன் என்றார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்களுக்குத் தலையாட்டும் பொம்மை எதிர்க்கட்சித் தலைவர் எமக்கு தேவையில்லை. அதன் காரணமாகவே நாங்கள் தனி எதிர்க்கட்சிக் குழுவாக இயங்கத் தீர்மானித்துள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்தானந்த அளுத்கமகே, தற்போதைய அரசாங்கம் இரண்டு தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அரசாங்கம் தனது கொள்கைப்படியே முன்னெடுத்துச் செல்லப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல தடவைகளில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பார்க்கும்போது ஜனாதிபதிக்கு இந்த அரசாங்கத்தில் எதுவித அதிகாரமும் இல்லை. மறுபுறத்தில் அமைச்சர்கள் ஆளாளுக்கு அடித்துக கொள்கின்றார்கள். விஜேதாசவும், ராஜிதவும் ஒருவரையொருவர் பகிரங்கமாக விமர்சித்துக் கொள்கின்றார்கள்.

அமைச்சர்களான விஜேதாசவும், நிமல் சிறிபால டி சில்வாவும் இந்த அரசாங்கம் நிலைத்து ஆட்சியில் இருக்காது என்று வலியுறுத்தியுள்ளனர். பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே லஞ்சம் வாங்கியிருப்பதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது இன்னும் ஆறு மாத காலத்திற்குள் இந்த அரசாங்கம் கவிழ்ந்துவிடும். எதிர்க்கட்சி குறித்தும் அதையேதான் சொல்ல வேண்டியுள்ளது. என்றார்.

ad

ad