புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2015

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த எங்களுடன் பிரிட்டன் ஒத்துழைக்க வேண்டும்; ரஷ்யா வேண்டுகோள்

பாரீஸ் தாக்குதலை அடுத்து அமெரிக்க கூட்டு ராணுவப் படையினருடன் இணைந்து சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது
தாக்குதல் நடத்தி வருகிறது பிரான்ஸ். ஏற்கனவே, ஈராக்கில் ஐ.எஸ். தீவரவாதிகள் மீது வான்வழித் தாக்குதலை பிரிட்டன் நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவிலும் தாக்குதல் நடத்த விரைவில் பாராளுமன்றத்தில் திட்ட அறிக்கை சமர்பிக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது கடும் தாக்குதல் நடத்த பிரிட்டன் ரஷ்யாவுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மரியா சகரோவா வேணடுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து, செய்தி சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், பிரிட்டனின் ஒத்துழைப்பு மிக அவசியமானது. அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. பிரிட்டனுடைய ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சிரியாவின் ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இன்றி தாக்குதலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். சிரியாவிற்கான தூதர் ஏற்கனவே மாஸ்கோவுக்கு வந்திருந்தபோது இதை உறுதிப்படுத்தியுள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து செயல்படுவது சிரியாவுடன் இணைந்து செய்ல்படுவதை போன்றதே என அவர் தெரிவித்துள்ளார். 

ad

ad