புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2015

அலுவலக நேரத்தில் செக்ஸ் படங்களில் மூழ்கி கடுப்பாட்டை இழந்த ஐநா சபை ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்

அலுவலக நேரத்தில் செக்ஸ் படங்களில் மூழ்கி கடுப்பாட்டை இழந்த ஐநா சபை ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்
செய்யப்பட்டுள்ளனர்.
ஐநா சபையின் தலைமையகம் நியூயார்க் நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கிளைகள் உண்டு. இதில் மொத்தம் 41 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த அமைப்பு ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தங்களது ஊழியர்கள் தவறு செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதை வெளிப்படையாகவும் அறிவித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஜுலை 1ஆம் தேதி முதல் 2015 ஜுன் 30ஆம் தேதி வரை தவறு செய் 60 ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது ஐநா தலைமை.
அதன்படி, 4 ஊழியர்கள் அலுவலக கணினியில் அதிக அளவில் செக்ஸ் படங்களை சேகரித்து வைத்துக் கொண்டும், பலருக்கு அதை பரிமாற்றம் செய்து கொண்டும் இருந்தது தெரிய வந்தது. மேலும், சிறார் செக்ஸ் படங்களையும் அதிக அளவில் விரும்பி பார்த்தும் தெரிய வந்துள்ளது. அதை அலுவலக இ-மெயிலிலும் பரிமாறிக் கொண்டுள்ளனர். இதனால், அந்த பணியாளர்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஊழியர் ஒருவர் தன்னுடன் பணி புரியும் மற்றொரு ஊழியரை ஆள் வைத்து கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக ஐநா சபை ஊழியர்களிடையே ஒழுங்கீனங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது

ad

ad