புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2015

சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு! (வீடியோ )

சென்னையில் பெய்த தொடர் மழையால் மன்னிவாக்கம் லக் ஷ்மி நகரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏராளமான
பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு முதலில் மீட்புப் பணியில் படகுகள் ஈடுபடுத்தப்பட்டன. 

தற்போது மீட்புப்பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தாம்பரம் விமானப்படை விமான நிலையத்தில் இருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுட்டுள்ளன. முதல் கட்டமாக வெள்ளத்தில் சிக்கியுள்ள பெண்கள் ஹெலிகாப்டர் வழியாக மீட்கப்படுகின்றனர்.

அதேபோல் சென்னை நகரில் உள்ள சப்வேக்கள் அறிவிக்கப்படாத நீச்சல் குளங்களாக மாறி வருகின்றன. தில்லை கங்கா நகர், பழவந்தாங்கல் பகுதியில் சப்வேக்கள் வெள்ள நீர் நிரம்பி காணப்படுகின்றன.

ad

ad