சனி, நவம்பர் 14, 2015

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கும் யோசனை

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கான யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 
 

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க கோரி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நேற்றையதினம் முழு நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா இதனைத் அறிவித்தார். 

இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.